search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ சேவை மையம்"

    • இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
    • ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அணுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் உள்ளது.

    அத்துடன் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்துக்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை 13-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (வாகன ஓட்டுநர் உரிமம், டிரைவிங் லைசென்சு), பிரமிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வ முள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட் டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர் நெட் மூலம் விண்ணப் பிக்கவும், https://www.tnesevai.tn.gov.in/ என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

    வருகிற 30-ந் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது https://tnega.tn.gov.in என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
    • முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    கூட்டுறவு துறை மூலம் தமிழகத்தில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

    இதன் மூலம் இத்துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை. என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை செய்து வருகிறது.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வருகிறது. அதே போல தமிழகத்திலும் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது. ரேஷன் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆன்லைன் மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் இதற்கான இடம் தேர்வு செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேயிமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் 11 ஆயிரத்து 867 தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் கிராமப் புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் கிராமங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் ரேஷன் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத்துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை தமிழக ரேஷன் கடைகள் விரைவில் வழங்க உள்ளன.

    ×